Tuesday, March 31, 2009

இப்போது ஜீ மெயில் இந்திய மொழிகளில் !

இப்போது ஜீ மெயில் இந்திய மொழிகளில் !
ஜீ மெயிலில் இப்போது தமிழில் மெசேஜை டைப் செய்யும் வசதி அறிமுகமாகி உள்ளது. தமிழ் மட்டும் அல்லாமல், ஹிந்தி, கன்னடம், தெலுகு மற்றும் மலையாளத்திலும் ஈ மெயில் அனுப்பலாம். இந்த வசதியின் தட்டச்சு "Phonetic" முறையில் செயல்படுகிறது. அதனால் தமிழ் கீ போர்டு அறியாதவர்கள் கூட இதனை சுலபமாக பயன்படுத்தலாம்.

இந்த சேவையை உப்யோகிகப்பது மிக சுலபம்.
புதிய ஈ மெயிலுக்காக "கம்போஸ் மெயில்" கிளிக் செய்த பின் திரையில் மெசேஜை டைப் செய்திட ஒரு பெரிய சதுரமான பாக்ஸ் காட்டப்படும். இதில் Bold, Italic, underline, போன்ற formatting இற்கான toolbar இல் இடது பக்கம் ஓரத்தில் 'அ ' அல்லது 'अ' என்ற எழுத்தைக்கொண்ட ஒரு பட்டனை காண்பீர்கள். அதனை கிளிக் செய்தால் தமிழில் டைப் செய்திடலாம். மொழியை மாற்றுவதற்கு 'அ ' எழுத்தின் அருகில் உள்ள சிறிய முக்கோணத்தை கிளிக் செய்தால் பிடித்தமான மொழியை தேர்ந்தெடுக்கலாம்.

No comments:

Post a Comment